மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/29/2018 12:47:15 PM கடற்படையினரின் அனுசரணையுடன் சுதேச குடியினருக்கு பாதுகாப்பான குடி நீர் வசதி

கடற்படையினரின் அனுசரணையுடன் சுதேச குடியினருக்கு பாதுகாப்பான குடி நீர் வசதி

[2018/11/29]

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அண்மையில் தம்பன பகுதியிலுள்ள சுதேச (வெத்தா) குடியினருக்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுதேசசிகளின் கிராமத்தில் நிறுவப்பட்ட இக்குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் இம்மாதம் (நவம்பர், 2018) 24ஆம் திகதி திறந்து வைத்தார். அதேசமயம், இது இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவினால் நிறுவப்பட்டு வழங்கப்பட்ட 534ஆவது குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ள இக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாட்டின் சுத்தமான குடிநீர் தட்டுப்பாடுள்ள கிராமப்புறங்களிலேயே அதிகமாக நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பயனடைந்துள்ளதுடன், அவர்களின் அன்றாட தேவைகளுக்கான சுத்தமான குடிநீரையும் இலவசமாக பெற்றுக்கொள்கின்றனர்

டிசம்பர் 2015ஆம் ஆண்டு இலங்கை கடற்படை வீரர்களின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்திற்கு தற்போது சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதியின் விஷேட செயலணி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன தமது காத்திரமான பங்களிப்பினை நல்கிவருகின்றன.

இந்நிகழ்வில், சுதேச குடியினரின் தலைவர், விஷ்வ கீர்த்தி வனஸ்பதி, உருவரிகே வன்னில அத்தோ மற்றும் தென்கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் தளபதி, ரியர் அட்மிரல் ருவன் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்