மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 11/29/2018 3:56:06 PM இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

[2018/11/29]

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இடம்பெறும் சர்வதேச மாநாடு மற்றும் தகவல் தொழிநுட்ப கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (28) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

“இணையவெளி எதிர்காலத்திற்கான நிரந்தர போர்முறை” என்ற கருப்பொருளின் கீழ் இந்த சர்வதேச மாநாடு, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கண்காட்சியுடன் இணைந்ததாக நவம்பர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இலங்கை இராணுவத்தின் பழைமை வாய்ந்த படையணிகளுள் ஒன்றான சமிக்ஞை படையணி, இணைந்த சமிக்ஞை பிரிவுகள், தகவல் தொழிநுட்ப படை பிரிவு, திருத்தம் மற்றும் பராமரிப்புப் பிரிவு, இணைய பாதுகாப்பு படை பிரிவு, இலத்திரணியல் சமிக்ஞை பயிற்சி பாடசாலை போன்ற பல பிரிவுகளுடன் பலம் வாய்ந்ததொரு கட்டமைப்பாக செயற்படுகின்றது.

இந்த படைப்பிரிவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் இந்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சிக்கு இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான். பங்களாதேஷ் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினர் அல்லாத சர்வதேச தகவல் தொழிநுட்பவியலாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

தகவல் தொழிநுட்ப கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அவர்கள் அதனைப் பார்வையிட்டார்.

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவினால் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முப்படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நன்றி:pmdnews.lk


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்