மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 12/13/2018 3:11:58 PM ஹவாய் தீவில் கடற்படை தினம் கொண்டாடப்பட்டது

ஹவாய் தீவில் கடற்படை தினம் கொண்டாடப்பட்டது

[2018/12/13]

அண்மையில் (டிசம்பர். 09) இலங்கை கடற்படை தனது 68வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதனை முன்னிட்டு கடற்படையினரால் நாடு பூராகவும் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் பல முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம் தற்போது ஹவாய் தீவின் ஹொனலுலுவில் உள்ள P 626 கப்பலில் கடற்படை தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹவாய் நகரில் உள்ள புனித போல்ஸ் சர்வதேச தியான நிலையம் கடற்படை வீரர்களினால் நிறம் பூசப்பட்டு (டிசம்பர். 08) புதுப்பொலிவு பெறச்செய்துள்ளனர். குறித்த கட்டிடத்தை உள்ளூர் நீல ஜாக்கெட் படை வீரர்கள் சுத்தம்செய்தும், நிறம்பூசியும் ஒரு புதிய தோற்றம் பெறச்செய்துள்ளனர். அதேசமயம் இலங்கை கடற்படை வீரர்கள் குழுவினரால் ஹவாயி தீவுகளில் முன்னெடுக்கப்பட்ட சமூக சேவையில் இதுவே முதல் தடவையாககும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்படை மரபுகளுக்கமைய கப்பலில் கடற்படை தின நிகழ்வுகள் (டிசம்பர். 09) இடம்பெற்றதுடன், இங்கு இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்கும் வகையில் அதிகாரிகள், கடற்படை வீரர்கள் மற்றும் வெவ்வேறு அமெரிக்க கடலோரப் பாதுகாப்புப் படையிலிருந்து அழைக்கப்பட்டவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்