மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 1/11/2019 4:06:57 PM இலங்கை இராணுவத்திற்கு புதிய பிரதம அதிகாரி நியமிப்பு

இலங்கை இராணுவத்திற்கு புதிய பிரதம அதிகாரி நியமிப்பு

[2019/01/11]

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதன்கிழமையன்று (ஜனவரி, 09) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்நியமனத்திற்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் கஜபா ரெஜிமன்டின் கேர்ணலாகவும் மற்றும் இராணுவத்தின் நிறைவேற்று ஜெனரலாகவும் சேவையாற்றியுள்ளார்.

1984 ஆம் ஆண்டு 19 ஆவது நிரந்தர ஆட்சேர்ப்பின் கீழ் இலங்கை இராணுவத்தில் இரண்டாம் தர லெப்டினனாக இணைந்து கொண்ட சில்வா அவர்கள், தனது மேஜர் ஜெனரல் பதவி நிலை வரையிலான காலப்பகுதிக்குள் இராணுவத்தின் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு துறைகளில் தனது திறமைகளை வெளிக்காண்பித்த இவர், பயிற்றுவிப்பாளர் அதிகாரியாகவும், இராணுவ செயலக பிரிவில் பதவி நிலை உத்தியோகத்தராகவும், கொமாண்டோ படையணியின் கட்டளை தளபதியாகவும் கடமை வகித்த ஒரு திறமைமிக்க சிறந்த அதிகாரியாவார்.

மேலும், இராணுவத்தில் ஆற்றிய பாரிய சேவையின் நிமித்தம் டப்ள்யூடப்ள்யூவி, ஆர்டப்ள்யூபி, ஆர்எஸ்பி ஆகிய மூன்று வெவ்வேறுவகையான பதக்கங்களை பெற்றுக்கொண்ட முதலாவது இரண்டாம்தர லெப்டினன்ட் இவராவார். இதேவேளை, அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, கிரீஷ், இத்தாலி, பிரான்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இராணுவ பயிற்சிகளையும் பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் தூதுவராகவும் பிரதி நிரந்தரவதிவிட பிரதிநிதியாகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் பழையமாணவரான சில்வா அவர்கள், பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி சங்கம் மற்றும் இலங்கை இரானுவ ஹொக்கி சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்