மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 2/2/2019 3:01:07 PM மாலி ஜனாதிபதி இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு நடந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தைதெரிவிப்பு

மாலி ஜனாதிபதி இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு நடந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தைதெரிவிப்பு

[2019/02/02]

மாலி குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் கெய்ஷ, அவர்கள் மாலியில் கடமைகளில் இருந்த சமயத்தில் பலியான இலங்கை அமைதி காக்கும் இராணுவத்தின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். மேலும் இந்த இரக்கமற்ற , நியாயமற்ற செயலை மிகவும் வன்மையாக கண்டித்தார்.

புது டில்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் மூலம் மாலி குடியரசின் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியானது 2019 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர் பலியானதும் மற்றும் பலர் காயமடைந்த சம்பவத்தை மாலி அரசாங்கம் மிகவும் வன்மையாக கண்டித்திருந்தது.

மேன்மை தங்கிய ஜனாதிபதியின் செய்தியுரை

மாலி அரசு டபண்ட்ஸா நகரிலுள்ள டூப்சாஸாவிற்கு அருகில் 2019 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர் பலியாகி பலர் காயமுற்ற சம்பவத்திற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் பலியாகிய இலங்கை அமைதி காக்கும் படையினர் மற்றும் காயமுற்ற ஏனையவருக்கும் அரசாங்கத்தின் சார்பிலும் குடியரசுத் தலைவர் மற்றும் மாலி மக்களின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றோம்.

மாலி அரசு உறுதிப்படுத்திய கட்டமைப்பினுள் மாலிக் கட்சிகளின் முயற்சிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை நாசப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கும் இந்த கொடூரமான மற்றும் நியாயமற்ற செயலை மேற்கொண்டவர்களுக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மாலியில்யில் கையொப்பமிடப்பட்ட செய்தி 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி இலங்கை வெளியுறவு விவகார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாலியில் ஜனவாரி மாதம் 25 ஆம் திகதி ஏற்பட்ட தாக்குதலின்போது 11 ஆவது இலேசாயுத காலாட்படையணியின் மேஜர் எச்.டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் 1ஆவது பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த சாஜன் எஸ்.எஸ் விஜயகுமார போன்றோர் பலியாகி மேலும் மூன்று இலங்கை அமைதி காக்கும் படையினர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது மாலியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்றி: army.lk


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்