மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/8/2019 12:27:54 PM ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/05/08]

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் அதிமேதகு துங்- லாய் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட டப்.டப்.வீ. ஆர்டப்பீ, ஆர்எஸ்பி.வீஎஸ்வீ. யுஎஸ்பி அவர்களை செவ்வாய்கிழமையன்று (மே, 07) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும்வகையில் அவர்களிடையே நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதி தூதுவர் திரு. தோர்ஸ்டென் பார்க்பிரெட் ஆகியோரும் கலந்துகொண்டனர். .


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்