மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 5/31/2019 10:13:48 AM புதிய விமானாப்படைத்தளபதி நியமனம்

புதிய விமானாப்படைத் தளபதி நியமனம்

[2019/05/29]

இலங்கை விமானப்படையின் தளபதியாக எயார் மார்ஷல் டிஎல் சுமங்கல டயஸ் அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை (மே,29) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதியிடமிருந்து தமது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எயார் மார்ஷல் டிஎல் சுமங்கல டயஸ் அவர்கள் இலங்கை விமானப்படையின் 17வது தளபதியாகும்.

கொழும்பு, விமானப்படைத் தலைமையகத்தில் இடம் பெற்றவிமானப்படை தளபதி மாற்றத்தை தெரிவிக்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வில், பிரியாவிடை பெறும் விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்கள் கலந்து கொண்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிரியாவிடைபெறும் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கலுக்கு செவ்வாய் கிழமை (மே,28) முதல் அமுலுக்கு வரும்வகையில் நான்கு நட்சத்திர எயார் சீப் மார்ஷல் தரத்திற்கு ஜனாதிபதியினால் பதவியுயர்வு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்