மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/5/2019 9:14:32 AM

“நாட்டுக்காக ஒன்றினைவோம்” மொனராகலை மாவட்ட செயற்திட்டத்தின் நான்காவது தினம் இன்றும் வெற்றிகரமாக இடம்பெற்றது

[2019/07/04]

பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய செயற்திட்டத்தின் ஐந்தாவது செயற்திட்டம் கடந்த முதலாம் திகதி மொனராகலை மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமானது.

மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை, தனமல்வில, மடுல்ல, கதிர்காமம், புத்தள, படல்கும்புர, வெல்லவாய, மெதகம, சியம்பலாண்டுவ, பிபிலை, செவனகல ஆகிய 11 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 319 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஜூலை மாதம் 06ஆம் திகதி வரை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனூடாக 479,000 பயனாளிகள் நன்மைகளைப் பெறுவர்.

ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் பிரதான நிகழ்ச்சித்திட்டங்களான சிறுநீரக நோய்த்தடுப்பு, கிராமசக்தி, தேசிய சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரை ஊக்குவித்தல், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா, தேசிய உணவு உற்பத்தி போன்ற பல நிகழ்ச்சித்திட்டங்கள் இந்த வாரம் முழுவதும் அம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள விவசாய,, வீடு, நிலம், தொழில் மற்றும் சுகாதாரம் போன்ற அனைத்து பிரச்சினகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மக்கள் தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கக்கூடிய வகையில் “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” நிகழ்வுகளும் இந்த வாரம் முழுவதும் அம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது தினமான இன்று மொனராகலை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், பெருமளவிலான மக்கள் இவற்றில் பங்குபற்றினர்.

முதியோர்களுக்கான விசேட ஆலோசனை நிகழ்வு மொனராலை பிரதேச செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றதுடன், பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன. நீர்ப்பம்பிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு வெள்ளவாய பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் நடைபவனி பிபிலை வெல்லஸ்ஸ மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

நாட்டில் சிறுநீரக நோய் அச்சுறுத்தல் காணப்படும் 11 மாவட்டங்களில் மொனராகலை மாவட்டமும் ஒன்றாகும். இதுவரையில் 1459க்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள் இம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளதுடன், சியம்பலாண்டுவ, வெல்லவாய, தனமல்வில மற்றும் புத்தள ஆகிய பிரதேசங்களை மையமாகக்கொண்டு சிறுநீரக நோய்த்தடுப்பு பற்றிய விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

23 மில்லியன் ரூபா செலவில் 47500 குடும்பங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவையான 190,000 லீட்டர் சுத்தமான நீரை பெறக்கூடிய வகையில் 19 நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவை அப்பிரதேச அரச அலுவலர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறைந்த வருமானம் பெறும் சிறுநீரக நோயாளர்களின் குடும்பங்களுக்கு நச்சுத்தன்மையற்ற உள்நாட்டு அரிசி வழங்குதல், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குதல், சிறுநீரக நோயாளர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

நன்றி: pmdnews.lk

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்