மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 7/8/2019 3:52:44 PM பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

[2019/07/07]

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் மாகாணங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வு கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று (ஜூலை, 06) ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களும் வருகை தந்திருந்தார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் அவர்களை தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் எம் எம் எஸ் பெரேரா அவர்கள் வரவேற்றதுடன், மாணவர் சிப்பாய்கள் படையணியினரால் மரியாதையும் செலுத்தி வரவேற்கப்பட்டார்.
இவ்வருடம் நடைபெறும் இரண்டு நாள் வருடாந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் 38 பெட்டாலியன்களிலிருந்தும் சுமார் 800 மாணவர் சிப்பாய்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. என் கே ஜி கே நேம்மவத்த, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவ சிப்பாய்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     
     
     

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்