மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/1/2019 7:17:10 AM 'வன்னி இன்னோவெட்டா - 2019' இராணுவ வீரர்களின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

'வன்னி இன்னோவெட்டா - 2019' இராணுவ வீரர்களின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

[2019/07/31]

இலங்கை ராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வன்னி இன்னோவெட்டா -2019' கண்காட்சி பதவிய, பராக்ரமாபுரவில் கடந்த வாரம் நடைபெற்றது. ஜூலை மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் பதவிய பொது மைதானத்தில் இராணுவ வீரர்களின் படைப்பு திறன்களைக் காண்பிக்கும் மற்றும் பாராட்டும் வகையில் நடைபெற்ற இரண்டு நாள் வருடாந்த கண்காட்சியில் ஏராளமான மக்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடாந்த கண்காட்சியானது சேவையில் உள்ள படை வீரர்களின் படைப்பு திறன்களிலிருந்து பிறந்த புதுமைகளை வெளிப்படுத்த உதவுகிறது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சியில் 36 கண்காட்சிக் கூடங்களில் வன்னிப் படையினரின் திறமைகளை வெளிப்படுத்தும் கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இங்கு காட்சி படுத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்களில் மூன்று சிறந்த கண்டுபிடிப்புக்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றிற்கு பிரபல மதிப்பீட்டு குழுவினால் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இக் கண்காட்சி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்