மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/9/2019 4:31:30 PM ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாட பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாட பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/08/09]

ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அதனுடன் தொடர்புடைய பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஆகஸ்ட், 08) சந்தித்தனர்.

பாதுகாப்பு அமைச்சில் இன்று மாலை இடம்பெற்ற இச்சந்திப்பின் போது திரைப்பட தயாரிப்பு மற்றும் விளம்பர நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்கள் பிரதிநிதிகள் குழுவினர் படப்பிடிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக ட்ரோன்களை பயன்படுத்தும் போது தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்தனர். ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் பின்னர் மே மாதத்தில் வர்த்தமானி அறிவிப்பு மூலம் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் செயல்பாடு என்பன நிறுத்தப்பட்டது. இதன்போது பாதுகாப்பு செயலாளர் அவர்கள், குறித்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸ்அதிகாரிகள் மற்றும் வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குழு ஆகியோருடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்