மின்அஞ்ஞல் பிரசுரிப்பு உங்கள் கருத்து

යාවත්කාලීන වේලාව: 8/13/2019 6:04:01 PM இராணுவ இணைப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

இராணுவ இணைப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

[2019/08/13]

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் (ஆகஸ்ட், 08) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு இலங்கையில் உள்ள பல்வேறு உயர் ஸ்தானிகராலய மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களின் பங்கேற்புடன் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர், டீஜே கொடித்துவக்கு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் பிரதானி ஆகியோரினால் விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில், பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர், டிஎம்ஏபி திசாநாயக உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்