››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 11/21/2014 6:05:01 PM ஒழிக்கப்பட்ட தீவிரவாதத்தின் பின்னரான இலங்கையின் அபிவிருத்திஒழிக்கப்பட்ட தீவிரவாதத்தின் பின்னரான இலங்கையின் அபிவிருத்தி

ஒழிக்கப்பட்ட தீவிரவாதத்தின் பின்னரான இலங்கையின் அபிவிருத்தி

இலங்கையில் நீடித்து நிலைத்திருந்த கொடூரமான பயங்கரவாத யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து இலங்கையும் தற்போது சமாதான நாடாகத்திகழ்கிறது. கோரயுத்தம் மற்றும் புலிகளால் கட்டவிழ்க்கப்பட்ட மனிதப்படுகொலைகள் என்பவற்றுக்கெதிராக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளும் மனிதாபிமான செயற்பாடுகளும் சரித்திரத்தில் தடம் பதித்த அத்தியாயங்களாகவுள்ளமை உலகறிந்த உண்மை.

இலங்கை, பயங்கரவாதத்தை ஒழித்து உலகுக்கு முன் உதாரணமாகத்திகழ்ந்த அதேவேளை யுத்தத்தின் பின்னரான காலத்தில் பெரும் சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டியிருந்தது. அவற்றை வெற்றி கொள்வதற்காக புனர்வாழ்வு. புனரமைப்பு, மீள்குடியேற்றம், நல்லிணக்கம் போன்ற விடயங்களை செயற்படுத்தி அவற்றில் வெற்றிகான வேண்டியிருந்தது. இந்த தேசிய திட்டத்துக்காக படையினர் பெரும் பங்காற்ற வேண்டியுமிருந்தனர்.

புலிகளினால் கேடயமாகப் பயண்படுத்தப்பட்ட சுமார் மூன்று இலட்சம் பொதுமக்கள் உள்ளூரிலே இடம்பெயர்ந்து இருந்தனர். அவர்களுக்கான நலன்புரித் திட்டங்களை செயற்படுத்துவது பாரிய பிரச்சினையாகவிருந்தது. ஆகவே இடம்பெயர்ந்த மக்களை வவுனியா மாவட்டத்தில் நான்கு கிராமங்களிலும் மெனிக்பாம் உட்பட மன்னார் மாவட்டத்திலொரு கிராமத்திலுமாக மொத்தமாக ஐந்து கிராமங்களில் நலன்புரி நிலையங்கள் அரசால் அமைகப்பட்டன. இவ் நலன்புரி நிலையங்களில் மக்களுக்குத் தேவையான மின்சார வசதி, சமையலுக்குத் தேவையான இடவசதிகள், மலசலகூடங்கள், குளியலரைகள், சிறார்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கப்பட்ட அறைகள் என பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

நலன்புரி நிலையங்களிலுள்ள பயனாளிகளுக்காக ஆறுக்குமேற்பட்ட புனர்வாழ்வு செயற்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன. இதன் முதற் கட்டமாக இருபத்து இரண்டு பாதுகாப்பான புனர்வழ்வு மையங்களில் வயதானவர்கள் அமர்த்தப்பட்டனர். இன் நிலையங்கள் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினால் பராமரிக்கப்பட்டன. போராளி இயக்கத்தைச் சேர்ந்த சிறார் போராளிகளுக்காக விசேட செயற் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டதுடன் இளைஞர்களுக்காக விசேட கல்வித்திட்டமொன்று முன்னெடுத்துச்செல்லப்பட்டன. இவ்வாறு இன்னும் பல செயற்திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டதால் சர்வதேசரீதியில் அரசு பாராட்டைப்பெற்றது.

யுத்தகாலத்தின்போது புலிகளினால் புதைக்கப்பட்ட என்னற்ற நிலக்கன்னிகளை அகற்றும் பணி அரசுக்கு பெரும் சவாலாகவிருந்தது. எனினும் மிகவும் சாதுர்யமாக திட்டமிட்ட்டு அவற்றை அகற்றவேண்டியிருந்தது. முக்கியத்துமளிக்கப்பட்ட பிரதேசங்கள் முதலில் தெரிவுசெய்யப்பட்டு அப்பிர தேசத்திலுள்ள நிலக்கன்னிகளும் ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களும் அகற்றப்பட்டன. இந்தவகையில் விவசாயக்காணிகளும் காடுகளும் துப்புரவாக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்பக்கூடியதாகவிருந்தது. 2012 ஆம் ஆண்டளவில் சுமார் 469,275 எதிரிகளைத்தாக்கும் ஆயுதங்களும் 1,399 தாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும் 388,963 பயண்படுத்தப்படாத ஆயுதங்களும் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. தற்போது மிகவும் சிறிய ஒரு பகுதியே துப்புரவாக்கப்பட வேண்டியிருக்கிறது.

அந்த வகையில் அதிகமான பிரதேசங்கள் துப்புரவாக்கப்பட்டுவிட்டது அங்கு இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்ட்டுவிட்டனர். அவர்களுக்கான நீர்ப்பாசனம், மின்வினியோகம், வீதி அபிவிருத்தி உட்பட அதிகமான அபிவிருத்தித்த்திட்டங்கள் பெரும் தொகையான நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. அரசாங்கம் நகர கிராம அபிவிருத்தியை முன்னெடுத்துச்சென்ற அதேவேளை கல்விக்காக முக்கியத்துவம் கொடுத்து பெரும் செலவில் பாடசாலைகளையும் கட்டி கல்வி நடவடிக்க்கையை மேற்கொள்கிறது.

முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு அளிக்கப்பட்டு படிப்படியாக அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டனர். இவ்வாறு புனர்வாழ்வழிக்கப்பட்ட பெருந்தொகையான இளைஞர்கள் அரச தினைக்களங்களில் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையைக் கட்டியெழுப்புமுகமாக வடக்கு கிழக்கிலிருந்து இளைஞர்கள் பொலிஸ் சேவைக்குச் சேர்துதுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். அன்மையில் சுமார் நூறு தமிழ்ப்பெண்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களிலிருந்து இராணுவத்தில் சேர்ந்துள்னர். வடபகுதியைச்சேர்ந்த ஆயிரக்ணக்கான பட்டதாரிகள் அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

2011ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து. நூறு நாடுகளுக்கு மேற்பட்ட சுமார் 51,400 வெளிநாட்டவர்கள் வட பகுதியைச் சென்று பார்வையிட்டுள்ளர். தென் பகுதியைச்சேர்ந்த அதிகமான மக்கள் வட பகுதிக்குச்சென்று வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். நாட்டை இருண்ட யுகத்துக்குக்கொன்டு சென்ற கொடிய யுத்த்தை முடிவுக்கு கொண்டு வந்த படையினர் தற்போது நாட்டின் அபிவிருத்திக்காக தங்களை அர்ப்பணிக்கின்றனர். எனவே பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் போராடிப்பெற்ற விடுதலையையும் சுதந்திரத்தையும் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் அனுபவிப்பதுடன் சுபீட்சமான எதிர்கால இலங்கைக்காக அனைவரும் ஒன்றுபடுவோமாக.


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்