››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 11/21/2014 6:05:11 PM நவீனமயமாகும் முல்லைத்தீவு மாவட்டம்

மீண்டும் பாரிய குளங்கள், சிறந்த கல்வி,சுகாதார வசதிகள்

நவீனமயமாகும் முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில், குளங்கள் புணரமைத்தல் போன்ற நீர்ப்பாசனத்திட்டங்கள் உட்பட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. புதிய பாலங்கள் அமைத்தல் கால் நடைகள் மற்றும் பால் உற்பத்தித்திறனை உக்குவித்தல் போன்ற மக்களுக்கு வருமாணத்தையீட்டக்கூடிய பல திட்டங்களை அரசு அமுல்படுத்தி வருகின்றது. இதனடிப்படையில் 31.3 மில்லியன் ரூபா நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இவற்றுள் அதிகாமான திட்டங்கள் முடிவுற்ற நிலையிலும் ஓரிரு அபிவிருத்திப்பணிகள் தொடர்ந்த வண்ணமும் உள்ளன. விவசாயம் மற்றும் மீனவ சமூகங்களைச் சேர்ந்த அதிகளவான மக்கள் இயல்பாக தமது பாரம்பரிய தொழில்களை மேற்கொள்ளத்தக்க வகையில் அரசானது சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இம்மாவட்டமானது புலிகளால் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையிலும், அரச அபிவிருத்தித் திட்டங்கள் மக்களைச் சென்றடையாத நிலையிலும் இருந்தது. எவ்வாறாயினும் இயற்கை வளமுள்ள அப்பிரதேசத்தில் மக்கள் அனுபவிக்கும் அளவுக்கு புலிகளால் எவ்வித ஆக்கபூர்வமான திட்டங்களும் நடைபெற்றிருக்கவில்லை. நாட்டில் நிலவும் தற்போதய சமாதான சூழலில் சமாதானக்காற்றை மக்கள் சுவாசிப்பதாலும், அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அமுல்படுத்துவதனாலும் மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியுடனும் தொழிலில் ஈடுபடுவதைக் கானமுடிகின்றது. அந்தவகையில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் மரிதிமேட்பட்டு பிரதேச செயலகப் பிரிவுட்குட்பட்ட கன்னுக்கேனிக்குளம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் மரிதிமேட்பட்டில் 0.2 மில்லியன் செலவில் விலங்குப் பண்ணையொன்றும் நிறுவப்பட்டுள்ளது. முதியன்காட்டில் ஆறு மில்லியன் ரூபா செலவில் நீர்ப்பாசன வடிகாலமைப்புத் தொகுதியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1.3 மில்லியன் ரூபா செலவில் அரச அலுவலகத் தொகுதியொன்று ஒட்டு சுட்டானில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மந்தை கிழக்கில் 3.3 மில்லியன் ருபா செலவில் பாலமொன்று மந்தைக்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மந்தை கிழக்கில் 7 மில்லியன் ரூபா செலவில் பால் பண்ணைக்கிராமம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபிவிருத்திப்பணிகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம் மாவட்டச் செயலகத்தின் கூற்றின்படி பொருளாதார அபிவிருத்திக்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் துரிதமாக வடபகுதியை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தின்கீழ் 83.3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இவை மாவட்டத்தின் 21 கிராமங்களை உள்ளடக்கிய 18,013 பேரின் அபிவிருத்தி நலனுக்காக செலவிடப்படுகின்றன. அத்துடன் 63.6 மில்லியன் ரூபா ஏற்கனவே ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வீட்டுத்திட்டங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட ஐம்பது வீடுகள் கடந்த வாரம் பயணாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. இவ்வைபவத்தில் புனர்வாழ்வு அமைச்சர் எம்.எச். குணரத்ன வீரகோன், பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன், வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ சந்ரசிரி, முத்த இராணுவ அதிகாரிகள், மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்துக்காக சுமார் 18.75 மில்லியன் ரூபா செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை மேலும் 106 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடும் வைபவொன்றும் இடம்பெற்றது இவற்றுக்காக சுமார் 39.75 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

மாதிரிக்கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில் மின்சாரம், நீர், பாதைகள், பாடசாலை அடங்கலான சகல வசதிகளும் கொண்டதாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீட்டுடன் தலா 40 பேர்ச் காணி வழங்கப்படவுள்ளது.
நவீன நகரமயமாக்கல் திட்டங்கள்

நகர அபிவிருத்தி அதிகார சபையானது ஏற்கனவே நகர மயமாக்கலுக்கான வேலைத் திட்டங்களை ஆரம்பித்துவிட்டன. மாவட்டம் முழுவதும் நூறு சதவீதம் மிகவிரைவில் மின் வசதியைப் பெறக்கூடியதாகவுள்ளது. கடந்த வருட முடிவுக்குள் 26,802 முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகள் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் 12,558 வீடுகள் புதிதாக்கட்டப்பட்டுள்ளன. அத்துடன் 10,000 பகுதியளவில் சேதமுற்ற வீடுகள் மீள புனரமைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2,022 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டன. இத்திட்டத்தின்கீழ் 9,000 விவசாயிகள் பயணடைந்ததுடன் 1,215 ஏக்கர் கைவிடப்பட்ட விவசாய நிலங்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு 206 இரு சக்கர உளவு இயந்திரங்களும், 144 நான்கு சக்கர உளவு இயந்திரங்களும், 2,723 தொன் விதை நெல்லும் 0.22 தொன் தானியங்களும் வழங்கிவைக்கப்பட்டன. மேலும் 0.06 தொன் பயறு, 0.03 பாசிப் பயறு, 0.04 தொன் கௌப்பி, 0.05 தொன் சிவப்பு வெங்காயம், 0.004 தொன் சோளம், 0.002 தொன் எள், 1500 விவசாய உபகரணங்கள் போன்றனவும் விநியோகிக்கப்பட்டன.

குளங்களின் புனரமைப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கான விசேட திட்டத்தின் கீழ் 4 பெரிய குளங்கள் உட்பட பத்து குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் வவுனுக்குளம், மருதம் குளம், கல்விலான் குளம், கொள்ளவிலான் குளம் போன்றனவும் அடங்கும். இதேவேளை குளங்களின் புனரமைப்புப் பணிகளுக்காக 9,000 மில்லியன் ருபா மதிப்பிடப்பட்டுள்ளதுடன் முதியங்குளத்துக்கான புனரமைப்பு வேளைகள் எதிர்காலத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. நீர்ப்பாசன காணிகள் 6,112 ஏக்கர்களாக அதிகரிக்கப்படும்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 23,450.75 மில்லியன் ரூபா நிதியில் 224.67 கி.மீ நீளமான பாதைகள் புனரமைப்பு அல்லது செப்பனிடல் மற்றும் புதிதாக அமைத்தல் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளின் அபிவிருத்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில் 115 பாடசாலைகள் 24,037 மாணவர்களையும் 1,508 ஆசிரியர்களையும் கொண்டு இயங்குகின்றன. இம்மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித்தரத்தை விருத்தி செய்வதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் 1000 இடை நிலைப்பிரிவு பாடசாலைகளும் 5,000 ஆரம்பப்பிரிவு பாடசாலைகளும் நாடு முழுவதும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. துனுக்காய் கல்வி வலயத்தில் 6 மையப் பாடசாலைகளும் 22 ஊட்டற் பாடசாலைகளும், முல்லைத்தீவு கல்வி வலையத்தில் 6 மையப்பாடசாலைகளும் 9 ஊட்டற்பாடசாலைகளும் இயங்குகின்றன.

அத்துடன் மீன்பிடி மற்றும் நிரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சும் மாகாண நிர்வாகமும் இணைந்து சமூக பொருளாதார நலன்புரித் திட்டங்களை பிரதேச மீனவ சமூகத்துக்காக அமுல்படுத்துகின்றன. 2010ஆம் ஆண்டில் 1379.55 தொன்களாக இருந்த மீன் உற்பத்தி 2011ல் மூன்று மடங்காகி 4,361.73 தொன்களாக அதிகரித்துள்ளன. மீனவ குடும்பங்களைச்சேர்ந்த பாடசலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்