››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அபிவிருத்திப் பாதையில் “ரனவிரு அபரல்ஸ்”

அபிவிருத்திப் பாதையில் “ரனவிரு அபரல்ஸ்”

ரனவிரு அபரல்ஸ் என்பது இலங்கை இராணுவத்தின் ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இது யக்கலயிலுள்ள டேவிட்பீரிஸ் வீதியில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையானது பல்வேறு வகையான இராணுவ சீருடைகளையும் சர்வதேச தரத்துடன் உயர் ரக தரத்தில் உற்பத்தி செய்வதோடு இராணுவத்தினரின் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுவதுடன் இத் தொழிற்சாலையானது யுத்தத்தில் காயமடைந்த படைவீரர்களைக் கொண்டு நடாத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் ஆடைத் தொழிற்சாலையானது திரு.டேவிட் மெரிக் என்பவரால் நண்கொடையாக வழங்கப்பட்ட காணியில் 27.03.1996 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டதாகும். இது வரவேற்கத்தக்க உதவிகளை வழங்கக்கூடிய நபர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடனான இலங்கை இராணுவத்தினரின் புதிய திட்டமாக அத்தருணம் ஆரபிக்கப்பட்டது. இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு நிதியத்திலிருந்து ஆரம்ப கட்டமாக நிதியுதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இலங்கை அபரல்ஸ் ஏற்றுமதி கழகம் உள்ளடங்கலாக தேசிய அபரல்ஸ் ஏற்றுமதி கழகம், சிங்கர் ஸ்ரீலங்கா லெப் டிரேடிங் லிமிட்டட் போன்றவை இவ் ஆடையகத்தை நிர்மாணிப்பதற்கு தமது அநுசரணையை வழங்கியிருந்தன. இத்தொழிற்சாலையில் சேவையாற்றுவதற்கு தேவையான பயிற்சிகளை ரைஸ்டார் அபரல்ஸ் வழங்கியிருந்தது. இத்தொழிற்சாலை 25 இயந்திரங்களுடனும் 90 படைவீர்ர்களுடனும் 4 அதிகாரிகளைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இத்தொழிற்சாலையின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் இ.எம்.ஜி விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்கும்போது, இத்திட்டமானது இராணுவத்தினருக்கு உயர் தரத்தில் சீருடையை வழங்குவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதாகும் எனக்குறிப்பிட்டார்.
இத் தொழிற்சாலையின் நிர்வாக நடவடிக்கைகளானது தலைமையகப்பிரிவு, ஆய்வுப்பணியகப்பிரிவு மற்றும் உற்பத்திப் பிரிவு என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது. இப்பிரிவுகளின் கீழ் படையினரைக் கொண்டு தொழிற்சாலையின் நிர்வாகத்தை இலகுவாக செய்யக்கூடியதாக இருக்கின்றது.

தற்போது இத் தொழிற்சாலையில் சுமார் 300 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன, 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேவையாற்றுகின்றனர். வினைத்திறனை கருதும் போது சொற்ப அளவு கழிவுத் துணிகளே வீசப்படுகிறது. அந்த அளவுக்கு உச்ச பயனையும் பெறக்கூடியவாறு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைய 2012 ஆம் ஆண்டு “நெசனல் கிறீன்” விருது, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசிய உறபத்திக்கான விருதுகளையும் இத் தொழிற்சாலையானது பெற்றுள்ளமை தொழிற்சாலையின் வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகும்.

தொழிற்சாலை அமைந்துள்ள வளாகமானது சூழல் மாசுறலை பெரிதும் தவிர்க்கும் வகையில் சுத்தமாகவும் பசுமையுடனும் காட்சியளிப்பது கண்கவர் காட்சியாகும்.

ரனவிரு அபரல்ஸானது தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் பாரிய பங்களிப்பு செய்கின்றமை இன்றியமையாத்தாகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்