››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யுத்த வீரர்களுக்கு பிரத்யோக அங்கீகாரம்

யுத்த வீரர்களுக்கு பிரத்யோக அங்கீகாரம்

யுத்த வீரர்களுக்கான விசேட பரிசுகள் வழங்கும் அடையாள அட்டை மற்றும் சின்னம்,

யுத்த வீரர்களின் குடும்பங்கள் மற்றும் அங்கவீனமுற்ற வீரர்களுக்கு சமூகத்தில் விசேட அங்கிகாரம் வழங்கும் நோக்கில் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்தன அவர்கள் பாதுகப்ப்பு அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றினை நேற்று (மே.29) ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் இக்கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு ஏபிஜி கித்சிறி அவர்களின் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் இந்நிகழ்வில் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள்,சிறந்த வங்கிகளின் அதிகாரிகள், காப்புறுதி நிறுவனங்களின் அதிகாரிகள்,போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு ஏபிஜி கித்சிறி உரையாற்றுகையில்; யுத்த வீரர்களின் குடுமபங்கள், அங்கவீனமுற்று ஓய்வு பெற்று மருத்துவ தேவையுடைய இராணுவ வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்று சேவையில் இருக்கின்ற இராணுவ வீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இச் செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் என தெரிவித்ததுடன் இவ் விசேட அடையாள அட்டை அறிமுக மூலம் அவர்களின் அன்றாட தேவைகளை தாமதமின்றி அனைத்து இடங்களிலும் அவர்களுக்கான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழவின்போது யுத்த வீரர்கள் மற்றும் அவரகளுடைய குடும்ப உறுப்பினர்களின் அன்றாடத் தேவைகளை இலகுபடத்தும் நோக்கில் பல வகையான திட்டங்கள் வருகை தந்திருந்த அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் உயிரிழந்தவர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படை வீரர்களுடைய பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவது பற்றியும் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.

இச் செயற்திட்டத்தின் ஆரம்பகட்டமாக நாடளாவிய ரீதியில் சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்று நடைபெற இருப்பதுடன் உத்தியோகபூர்வ வலைத் தளம் ஒன்றும் திறந்து வைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிக் கலந்துரையாடல் மற்றும் ஏற்பாடுகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கெளரவ ருவான் விஜேவர்தன அவர்கள் தலைமையில் அடுத்த கூட்டம் நடைபெற இருக்கின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்