››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

படை விரர்களுக்கான விஷேட அடையாள அட்டை வினியாகம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

படை விரர்களுக்கான விஷேட அடையாள அட்டை வினியாகம் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்

முப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் வகையில் விஷேட அடையாள அட்டை ஒன்றை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஜூலை 26 ஆம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு அனுசரனை வழங்கும் முன்னணி நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று (ஜூன் 24ஆம் திகதி) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

நாட்டின் விடிவிற்காக உயிர் நீத்த, அங்கவீன முற்ற படைவீரர்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை வழங்கும் நோக்குடனே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும், ரணவிரு சேவா அதிகார சபையுடன் இணைந்து படைவீரர்களுக்கான விஷேட அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பான பிரதான நிகழ்வு ஜூலை மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கு அனுசரனை வழங்கும் முன்னணி நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பிடுகையில்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தவோ, அழுத்தங்களை கொடுக்கவோ எந்தவொறு குழுக்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு தற்போது எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என்று தெரிவித்த அவர், புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும் அவ்வாறான அமைப்புகள் மீண்டும் தலைதூக்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், வடக்கில் முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறிவருகின்றனர். இது தொடர்பில் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவர்கள் கூறுவது போன்று தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது, புலிகள் இயக்கமும் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது. அத்துடன் எமது இந்த அரசாங்கத்தினால் எந்தவொறு முகாம்களும் அகற்றப்படவில்லை என்பதை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதேபோன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த வாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. நாட்டிற்காக சேவையாற்றிய படைவீரர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வகையிலும் முன்னுரிமைகளை வழங்கும் வகையிலுமே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் இது போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அது மக்கள் அல்லது சமூக மயப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ. பி. ஜி. கித்சிறி, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன்சேக்கா, முப்படைகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட அனுசரனை வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்