››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விசேட சலுகைகள் வழங்கப்படும் 'விருசர' வரப்பிரசாத அட்டை அறிமுகப்படுத்தல் நிகழ்வில் ஜனாதிபதி

விசேட சலுகைகள் வழங்கப்படும் 'விருசர' வரப்பிரசாத அட்டை அறிமுகப்படுத்தல் நிகழ்வில் ஜனாதிபதி

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு தியாகங்கள் புரிந்த எமது முப்படை வீரர்களுக்கு பிரதியுபகாரம் செய்ய தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நேற்று (ஜனவரி, 25) அலரிமாளிகையில் இடம்பெற்ற அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கும் சேமநல மேம்பாட்டிற்காக விசேட சலுகைகள் வழங்கப்படும் 'விருசர' வரப்பிரசாத அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வின் போது தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக குறுகிய மணப்பான்மையுடையோரினால் தெரிவிக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன் முப்படை வீரர்களின் கௌரவத்தை பாதுகாத்து அவர்களை உலகின் தலைசிறந்த படைவீரர்களாக மிளிர வைக்கவுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபீஜி. கித்சிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வில் ரணவிரு சேவா திணைக்களத்தின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக அவர்கள் அதிதிகளை வரவேற்று உரை நிகழ்த்தினார்.

மேற்படி நிகழ்வில் உரை நிகழ்த்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், தேசிய பாதுபாப்பு குறைக்கப்படுதல் மற்றும் யுத்த வீரர்களின் நலன்புரிச் செயற்பாடுகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை மறுத்ததுடன் எமது முப்படை வீரர்களின் சேவைகள் மறக்கக்கூடியவையல்ல எனத் தெரிவித்தார். திட்டங்களை தொடங்கி வைத்தல் இலகுவான ஒன்று எனவும் அவற்றை தெடர்ந்து முன்னெடுக்க அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இம்மகத்தான பணிக்கு ஒத்துழைத்த அனைத்து நிறுவனங்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

முப்படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சேமநல மேம்பாட்டிற்காக விசேட சலுகைகள் வழங்கப்படும் 'விருசர' வரப்பிரசாத அட்டை வழங்கும் திட்டமானது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தொலை நோக்கு திட்டங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான திட்டம் ஒன்றிற்கு அதிக எண்ணிக்கையிலான அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் இணைந்து நலன்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்றமை இதுவே முதற் தடவையாகும்.

இந்நிகழ்வின்போது விருசர திட்டத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இவ்விணையத்தளத்தை http://www.virusara.gov.lk எனும் இணைத்தள முகவரியூடாக அனுகமுடியும்.

அத்துடன் ஜனாதிபதி அவர்கள் விசேட சலுகைகள் வழங்கப்படும் 'விருசர' வரப்பிரசாத அட்டையை அங்கவீனமுற்ற படைவீரர்கள் மற்றும் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு வைபவ ரீதியாக வழங்கி வைத்தார். மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வரிய குடும்பங்கள் மற்றும் முப்படை வீரர்களின் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு தலா 50,000.00 ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் அமைச்சர்கள், பீல்ட் மாஷல். சரத்பொன்சேகா, முப்படைத்தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புப்படை பொதுப்பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படை வீரர்கள், பொலிஸ், சிவில் பாதுகாப்புப்படை வீரர்கள், ரணவிரு சேவா திணைக்க உத்தியோகத்தினர் உள்ளிட்ட 'விருசர' வரப்பிரசாத அட்டைப் பயனாளிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்