››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விருசர வரப்பிரசாத அட்டை திட்டத்தின் மூன்றாம் கட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் ஆரம்பித்து வைப்பு

விருசர வரப்பிரசாத அட்டை திட்டத்தின் மூன்றாம் கட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் ஆரம்பித்து வைப்பு

விருசர வரப்பிரசாத அட்டை திட்டத்தின் மூன்றாம் கட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களினால் அம்பேபுஸ்ஸ சிங்க காலாற் படைப்பிரிவு தலைமையகத்தில் நேற்று (மார்ச்,23) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்சின் செயலாளர் திரு. ஏபிஜி கித்சிறி அவர்களும் கலந்து கொண்டார்.

நேற்றைய நிகழ்வில் இராணுவத்தினர் சார்பில் 1387அட்டைகளும் கடற்படையினர் சார்பில் 100 அட்டைகளும் விமானப்படை சார்பில் 102 அட்டைகளுமாக மொத்தம் 1625 பயனாளிகளுக்கான விருசர அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் ‘இத்திட்டம் தாய் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களைப் புரிந்த படையினருக்கான நிலையான நலன்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதே தவிர மாறாக குறுகிய அரசியல் அனுகூலங்களை அடைந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டதல்ல’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தனதுரையில் கௌரவ ஜனாதிபதி, பிரதமர், நான் அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எவருமே தேசத்தின் இறையாண்மை, ஐக்கியம், சுதந்திரம் ஆகியவற்றை நிலைநாட்ட மற்றும் பாதுகாக்க போராடிய எமது இராணுவ வீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என வலியுறுத்தினார்.

விருசர வரப்பிரசாத அட்டை திட்டத்தினது இரண்டாம் கட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு படிமுறைகளில் மொத்தமாக 13,000 அட்டைகள் விருசர பயனளிகளுக்கென விநியோகிக்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபைத் தலைவி, இராணுவ, கடற்படைத் தளபதிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்