››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

“யுடாசி” மற்றும் “யுகரி” எனும் இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் அண்மையில் (மார்ச்.24) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

ஜப்பானிய மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் முன்னேற்றமடைந்துவரும் நிலையில் நல்லெண்ண அடிப்படையில் விஜயத்தை மேற்கொண்டுள்ள இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

இதேவேளை, ஜப்பானிய கப்பல்கள்ளின் கட்டளைத்தளபதிகள். கொமாண்டர் டுமோவா பாபா மற்றும் கொமாண்டர் டுமொவிகி சஸே ஆகிய அதிகாரிகள் மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த சில்வா அவர்களை மேற்கு கடற்படைக் கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அத்துடன் இந்நிகழ்வின்போது பாதுகாப்பு ஆலோசகர், இலங்கைகான ஜப்பானிய துதுவர் கெப்டன் மொடொட்சுகு ஷிகெகாவா அவர்களும் கலந்து கொண்டார்.

இக்கப்பல் இங்கு தரித்திருக்கும்வேளையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இக்கப்பல் மார்ச் 25ஆம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கும்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்