››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

 “இந்தோனேசிய கொமொடோ பயிற்சி-2016” இல் இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா பங்கேற்பு

“இந்தோனேசிய கொமொடோ பயிற்சி-2016” இல் இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ரா பங்கேற்பு

“கொமொடோ பலதரப்பு கடற்படைப் பயிற்சி - 2016” மற்றும் “சர்வதேச கடற்படை மீளாய்வு” என்பனவற்றில் பங்கேற்க என இம்மாதம் 5ம் திகதி கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் சமுத்ராவைச் சேர்ந்த ஆழ்கடல் ரோந்துப் படகு இந்தோனேசிய நாட்டின் படங் பிரதேசத்தில் உள்ள தெலுக் பெயூர் துறைமுகத்தை அண்மையில் (ஏப்ரல்,10) சென்றடைந்தது.

இந்தோனேசிய நாட்டைச் சென்றடைந்த இலங்கை கடற்படைக் கப்பலுக்கு அந்நாட்டின் கடற்படை மரபுப்பிரகாரம் வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கப்பலில் 186 கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் சென்றுள்ளனர்.

“கொமொடோ கடற்படைப் பயிற்சி 2016” ஆனது படங், மேற்கு சுமாத்ரா மற்றும் மென்டவை தீவு ஆகிய பிரதேசங்களில் இம்மாதம் 12ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கடற்படை பயிற்சியில் சர்வதேச கடற்படை மீளாய்வு 2016, 15 வது மேற்கு பசிபிக் கடற்படை கருத்தரங்கு, கடற்படை செயலமர்வு, கடல்சார் கண்காட்சி, பொறியியல் குடியியல் செயல் திட்டம் மற்றும் மருத்துவ குடியியல் செயல் திட்டம் ஆகியன இணைந்து இடம் பெறவுள்ளன.

இவ்வருட பலதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் 37 நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிட்டத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்