››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம்களில் இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம்களில் இலங்கை மற்றும் இந்தியக் கடற்படையினர்

[2016/05/23]

இம்மாதம் 20,21, 22ம் திகதிகளில் பியகம, வெல்லம்பிட்டி, மல்வானை, மப்பிட்டிகம ஒருகொடவத்த, கடுவெல மற்றும் அவிஸ்ஸாவெல ஆகிய பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ முகாம் ஒன்று இலங்கை கடற்படையினரால் நடாத்தப்பட்டது.

இதேவேளை, 21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்தியக் கடற்படையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து 21, 22 ஆகிய தினங்களில் மருத்துவ முகாம்ங்களை நடத்தினர்.

இம்மருத்துவ முகாமின் போது சுமார் 2700 மேற்பட்ட மக்களுக்கு இரு நாட்டு கடற்படைகளையும் சேர்ந்த 18 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 70 மருத்துவ உதவியாளர்களால் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்