››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

[2016/06/06]

கொஸ்கம , சாலாவ இராணுவ முகாமில் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் நேற்று (ஜுன்.5) தீ ஏற்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கிலேயே குறித்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவாமல் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் வெளியேற்றப்பட்ட பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை என்பன பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் இராணுவத்தினர் கோரியுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்துக்கு விஜயம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது்.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்