››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம்

[2016/06/06]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.ருவன் விஜேவர்தன அவர்கள் கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக பார்வையிட இன்று (ஜுன்.06) விஜயமொன்றினை மேற்கொண்டார்.

அமைச்சர் விஜேவர்தன அவர்கள் தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களை வானுர்தி மூலம் சென்று பார்வையிட்டார்.அத்துடன் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் கலந்து கொண்டார்.

இதேவேளை, தீ பரவிய பகுதிகளில் மூடாத கிணறுகளில் காணப்படும் நீரை பருகுவதில் அவதானமாக இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குழாய் நீரைப் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் அத்துடன் இடம் பெயர்ந்த மக்களுக்கு பௌசர் மூலம் நீர் வழங்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிச்சம்பங்களினால் முகாமிலிருந்து சிதறிய பொருட்களை தொடுவதை தவிர்க்குமாறு இராணுவத்தினர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள ஆகியன இராணுவ வீரர்களினால் திருத்திக் கொடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால் மக்களையும் அவர்களுடைய உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் விஷேட ரோந்து நடவடிக்கைளில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் கொண்டு வரப்படும்.
அவசர நிலைமைகளின்போது பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளமாறு இராணுவத்தினர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

0112434251

0113818609



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்