››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை

[2016/06/06]

சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்.

அவிசாவலை, கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியத்தில் திடீரென எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவலையை தெரிவித்துக் கொள்வதுடன், எவருக்கேனும் பாதிப்புக்கள் அல்லது சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவற்றிக்கான நஷ்டஈட்டை அரசாங்கம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ஆம் திகதி மாலை 05.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் மேற்படி முகாமை அண்மித்த பிரதேசத்திலுள்ள சிவிலியன்கள் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளதாக அறிய முடிந்துள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துகளுக்கான பாரிய சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு இலங்கை இராணுவத்தினர் கூடுதல் கவனம் செலுத்தியதுடன், இராணுவத்தின் இந்த முயற்சிகளுக்கு விமானப் படையினர், கடற்படையினர், பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் தீயணைப்பு படையினர் முழுமையான ஒத்துழைப்பக்களை வழங்கினர். காயமடைந்தவர்களுக்க உடனடி சிகிச்சை வழங்கும் சேவைகளில் இலங்கை இராணுவ மருத்துவ படைப்பிரிவினர் ஈடுப்படுத்தப்பட்டனர். சம்பவம் நடைபெற்றது தொடக்கம் ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் பிரகாரம் பாதுகாப்புச் செயலாளர், முப்படையினர் மற்றும் பொலிஸார் சகல சந்தர்பங்களிலும் செயற்பட்டனர்.

இந்த சம்பவம் ஏற்பட்டமைக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கும் பொருட்டு பாதுகாப்பு சபையின் ஆலோசனைக்கமைய இராணுவத் தளபதியினால் அடிப்படை விசாரணை நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரினாலும் விசாரணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வெடிப்புச் சம்பவம் காரணமாக சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் ஆயுதங்களின் பாகங்களோ ஏதேனும் ஒரு பொருளோ சிதரி விழுந்து கிடக்கும் பட்சத்தில் அல்லது அவ்வாறான எந்தவொரு பொருட்களை கண்டெடுக்கும் பட்சத்தில் அவற்றை தொடுதல் வேறு தேவைகளுக்காக பயன்படுத்தல் போன்றவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்க்குமாறும் இது தொடர்பில் கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றது.

இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பிரிவு 0113 818609, 0112 4434251

இதேவேளை, 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் காரணமாக வவுனியா பிரதேசத்தில் சுமார் மூன்று தினங்களாக ஆயுதக் களஞ்சியம் தீ பற்றியுள்ளது, அத்துடன் கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்தியாவின் மஹாராஷ்டிரா பிரதேசத்திலுள்ள ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தை பயன்படுத்தி சில தரப்பினரால் முன்வைக்கப்படும் பலதரப்பட்ட வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்