››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும்

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும்

[2016/06/07]

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முழுமையாகப் மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்டவீடுகளை மீளக்கட்டிக் கொடுப்படவுள்ளதுடன் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நேற்று (ஜுன்.6) கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கலந்துகொண்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு தெரிவித்தார்.

கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட 7,763 குடும்பங்களில் 186 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் மாத்திரமே முகாம்களில் இன்னமும் தங்கியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெடிவிபத்து ஏற்பட்ட முகாமிலிருந்து ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டத்தில் உள்ளவர்களைத் தவிர ஏனையவர்கள் தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதுடன், தொடரும் நாட்களில் எச்சரிக்கை மிகுந்த பகுதி மேலும் குறைக்கப்படும் என்றும் கூறினார்.

இதேவேளை, வெடிவிபத்து ஏற்பட்டு சில நிமிடங்களிலேயே அவிசாவளை, கரவனல்ல, ஹோமாக ஆகிய இடங்களில் உள்ள வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 25 அம்பியூலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பாலித மஹிபால அவர்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், 8 பேர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் 38 பேர் சுவாச பிரச்சினைகள் சார்ந்த நோய்களுக்கு வைத்திசாலையில் சிகிச்சைபெற்று உடனடியாக வீடு திரும்பியுள்ளனர் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட முகாமிற்கு அருகில் காணப்படுகின்ற நீர் வழங்கல் நிலையத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கேஏ.அன்சார் தெரிவித்தார்.ஆனால் மக்களுக்கு சுத்தமான நீரை பௌசர் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.இச் சுத்தமான நீர் 200 நீர் தாங்கிகளுக்கு வழங்க்கப்படவுள்ளதாகவும்அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் நீர் பற்றி பரப்படும் தேவையற்ற வதந்திகளுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் மக்களை கேட்டுக் கொண்டார்.

விபத்து ஏற்பட்ட உடன் தமக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட சகல மக்களுக்கும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உதவிய சகலருக்கும் இராணுவத்தினர் சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் மேல் மாகாணத்துக்கான இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

20 தீயணைப்பு இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் பௌவசர்கள் ஆகியவற்றின் உதவியுடன் முகாமில் ஏற்பட்ட தீயை நேற்று காலை 10.00 மணியளவில் முற்றாக கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் நீதவான் ஆகியோர் வருகை தந்து ஆரம்ப கட்ட விசாரனைகளை மேற் கொண்டுள்ளதுடன் ஏற்பட்ட தீயினால் வெடித்துச்சிதறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களை சேகரிப்பதற்கான நடவடிக்கைள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இவ்விபத்தில் சேதமடைந்த வீடுகளை மீளக்கட்டிக்கொடுக்கும் பொறுப்பை இராணுவத்தினர் ஏற்றுள்ளனர் எனவும் மேஜர் ஜெனரல் தெரிவித்தார்.

இச்ந்தர்ப்பத்தில் சிலவிடயங்களை சரியாக சொல்ல முடியாது அத்துடன் இச்சமபவம் தொடர்பாக இராணுவத்தினரால் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டுதன் பின்னர் சரியான தகவல்களை தெரிவிக்க முடியும் என ஊடகவியாளர் எழுப்பிய கேள்விக்கு வதில் அளிக்கும் வகையில் தெரிவித்தார் அத்தடன் வெடிபொருட்கள் மற்றும் வெடிக்கும் பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கு கொஸ்கம முகாமே மிகவும் பொருத்தமாக இருந்தது. 10 வீதமான ஆயுதங்களே இங்கு எஞ்சியிருந்தன எனவும் தெரிவித்தார்.

இதேவேளை,அங்கிருந்து ஆயுதங்கள் ஏனைய பகுதிகளுக்கு மாற்றப்பட்டு கொண்டிருந்த வேளை இச்சமபவம் இடம்பெற்றதாகவும் இன்னும் ஆறுமாதகாலம் சென்றிருந்தால் இவை கூட வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.அத்துடன் இப்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ததின் பின்னர் இம் முகாமிற்கு முன்னால் செல்லுகின்ற ஹைலெவல் வீதியை மீள திறந்து வைக்க அடுத்த 48 மணித்தியாளத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ கெளரவ.பிரதி அமைச்சர். துனேஷ் கன்கந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பாலித மஹிபால, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கேஏ.அன்சார், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய ரத்நாயக்க, மேல் மாகாணத்துக்கான இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர். ஜயனாத் ஜயவீர, கொழும்பு அரசாங்க அதிபர் திரு.சுனில் கன்னங்கர உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்