››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

[2016/06/07]

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எந்தவித பாரிய சுகாதாரக் கேடுகள் இல்லை ஆனால் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு சுவாச பிரச்சினைகள் சார்ந்த நோய்களே வரக்கூடும் என கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து பற்றி விளக்கம் தெரிவிக்கும் வகையில் நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குறித்த இடங்களில் காணப்படுகின்ற நீரை எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் எந்தவித மாசும் அந்நீரில் காணப்படவில்லை எனவே நீர் பற்றி பரப்படும் தேவையற்ற வதந்திகளுக்கு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மக்களை கேட்டுக் கொண்டனர்.

இத்தீயினால் ஏற்பட்ட காற்றுமாசுபாடு குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் காணப்படும் என இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அத்துடன் மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் சேர்ந்து சுகாதார அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகியன குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்ற கிணறுகள் மற்றும் நீர் பெறப்படுகின்ற இடங்கள் ஆகியவற்றை இன்று (ஜுன்.07) பரிசோதிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிதறி காணப்படுகின்ற கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

காதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். பாலித மஹிபால, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கேஏ.அன்சார், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய ரத்நாயக்க ஆகியோர் நேற்று (ஜுன்.06) அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது மேற்கண்டவாறு தெரிவித்தனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்