››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம்

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம்

[2016/06/08]

அண்மையில் கொஸ்கம சாலாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைத்தல், தீயினால் எரியுண்ட எச்சங்களை அகற்றுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் நீர் நிலைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்துக்களை மதிப்பீடு செய்யும் பணிகளில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகள் நேற்றைய தினம் முதல் (ஜுன், 07) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ பொறியியல் சேவைகள் படையணி, இலங்கை பொறியியலாளர்கள் குழு, இலங்கை மின்னியல் மற்றும் எந்திரவியல் பொறியியலாளர்கள் குழு ஆகியன இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் விசேட செயலணியுடன் இணைந்து மீள்கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ளன.

இதற்கிணங்க நேற்றைய தினம் முதல் இரு வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகள், வாகனங்களுக்கான சேதங்களை மதிப்பிடும் பணிகளில் இரு வேறு குழுக்கள் ஈடுபடுத்த பட்டுள்ளனர். இதேவேளை, பாதிக்காப்பட்ட பகுதிகளின் நீர் நிலைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை இலங்கை கடற்படையினர் ஆரம்பித்துள்ளதுடன் சம்பவம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை இராணுவத்தினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்