››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும் விஜயம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும் விஜயம்

[June 10 2016]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைகளை கண்டறிய நேற்றய தினம் (ஜுன், 10) அப்பகுதிக்கான விஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன்போது, அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சம்பவத்துடன் தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பாக ஹன்வெல்ல பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். அத்துடன் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ சாகல ரத்நாயக்க, இராணுவத் தளபதி, பொலிஸ் மா அதிபர், மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோருடன் மேற்படி விடயம் தொடர்பில் ஆராயவென மீண்டும் ஒரு கலந்துரையாடல் ஒன்றிலும் அவர் ஈடுபட்டார்.

இவ்விரு கூட்டங்களின் போதும் தீர்வுகளை கண்டறிவதற்கான அரசாங்கத்தின் ஈடுபாடு மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கான அரச பொறிமுறை என்பன பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விஜயத்தின் போது, இராஜாங்க அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்ட நஷ்டங்களை விசாரித்தறிந்ததுடன் அதற்கான தீர்வுகளை விரைவாக மக்களுக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்தோடு இப்பகுதியின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறிய மீண்டும் ஒரு முறை அங்கு விஜயம் செய்யாவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கெளரவ. அனுர பிரியதர்சன யாப்பா, நிதி அமைச்சர் கெளரவ. ரவி கருணாநாயக்க, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் கெளரவ. சகலா ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்