››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

[June 10 2016]

கொஸ்கம வெடிப்பினால் ஏற்பட்ட தீ காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும்வகையில் சேதமடைந்த வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இராணுவம் தனது சகோதர சேவைகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் என்பனவற்றின் உதவியுடன் மிக விரைவாக செயற்படுமென இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் நேற்று மதியம் (ஜூன், 10) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இந்த எதிர்பாராத பேரழிவு காரணமாக ஏற்பட்ட சொத்துக்கள் இழப்பு மற்றும் பொது வாழ்க்கை இடையூறு என்பனவற்றுக்காக தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக இராணுவ தளபதி இதன்போது குறிப்பிட்டார்.

அத்தோடு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத் திட்டங்கள் மற்றும் நிவாரண பணிகளுக்கு இராணுவத்தின் சகோதர சேவைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட இதர அரச நிறுவனங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியவற்றின் மூலம் சிறந்த ஒத்துழைப்புக்கள் கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, தலைமை கள பொறியாளர் மேஜர் ஜெனரல் தனஞ்சித் கருணாரத்ன, 14வது பிரிவு ஜெனரல்கள் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெயசாந்த கமகே, மற்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்