››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முப்படைத்தளபதிகள் சகிதம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்றைய தினம் (ஜுன், 12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

அண்மையில் இராணுவ வெடிபொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த பகுதியில் இடம்பெற்ற தீயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் இவ்விஜயம் அமைந்தது. இக்கண்காணிப்பு விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சுருக்கமாக பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் பாதுகாப்பு செயலாளர், முதலில் படைவீரர் கிராம மக்களையும் தொடர்த்து கொஸ்கம சாலாவ மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது அவர் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என்றும் மக்களுக்கு உறுதியளித்தார்.
மேலும் அவர் வெடிப்பு சம்பவம் காரணமாக சேதமடைந்தவைகளை சீர்செய்ய முப்படையினரால் முன்னெடுக்கப்படும் மீள்கட்டுமான பணிகளையும் பார்வையிட்டதுடன் இவ்வேளைத்திட்டங்களை துரிதப்படுத்துமாறு முப்படைத்தளபதிகளை அறிவுறுத்தினார்.

தனது விஜயத்தின் ஒரு பகுதியாக கொஸ்கம வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர், வைத்தியசாலை பிரதிநிதிகளுடன் தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பொது மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் வகையில் பாதுகாப்பு படையினர் தொடர்ச்சியாக திருத்த வேலைகள் மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வீட்டில் வாழ்வதற்கான வழிவகைகளை செய்யும் வகையில் சுமார் 51 வீடுகளை முழுமையாக புனரமைத்து கொடுக்கபட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான கிணறுகள் சுத்தப் படுத்தப் பட்டுள்ளன. மற்றும் பதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான மருத்துவ பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்