››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

‘பொசன் போய தின’ விஷேட மத நிகழ்வுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

‘பொசன் போய தின’ விஷேட மத நிகழ்வுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

 

பொசன் போய தினத்தை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தல, தந்திரிமலே ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற பல்வேறு மத வழிபாட்டு நிகழ்வுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.

மத வழிபாட்டு நிகழ்வுகளின் ஒரு அங்கமாக சிங்கப்பூர் பௌத்த இளைஞர்கள் சங்கம், மலேசிய பௌத்த பேரவை, பௌத்த இளைஞர்கள் சம்மேளேனம் ஆகியன இணைந்து அனுராதபுரம் ருவென்வெளிசாய விகாரையில் 18 வது தடவையாகவும் ஏற்பாடு செய்திருந்த ‘பொசன் மகா தன்சல’ என அழைக்கப்படும் இலவச உணவு வழங்கும் புண்ணிய நிகழ்விலும் கலந்து கொண்டார். மேலும் அவர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகள், பக்தர்களுக்கான சில் துணிகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான சத்துணவுப் பொருட்கள் மற்றும் அனுராதபுர வைத்திய சாலை நோயாளர்களுக்கான படுக்கைகள் என்பனவற்றை வழங்கி வைத்தார்.

மேலும் அவர் லங்காதீப செய்திப் பத்திரிகையின் அனுசரணையுடன் தந்திரிமல விகாரையில் இடம்பெற்ற ‘அலோக பூஜா’ நிகழ்விலும் பங்கேற்றார். மேற்படி நிகழ்வின்போது தகம் தர்ம பாடசாலையைச் சேர்ந்த ஒரு தொகை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளும் வழங்கி வைக்கப் பட்டன.

அத்துடன் நேற்று (ஜுன.20) இடம்பெற்ற அலோக பூஜா’ அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் மிஹிந்தல ரஜமகா விகாரையில் ஒளியேற்றிய பின் அங்கு உரை நிகழ்த்தும் போது அவர், பொருளாதார வளர்ச்சிக்கு முன் தனிநபர் ஆன்மீக மேம்பாடு கட்டாயமாகும் எனக் குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வில் மகா சங்கநாயக்க உறுப்பினர்கள், விமானப்படைத் தளபதி எயார் மஷால் ககன் புலத் சிங்கள லேக் ஹவுஸ் பத்திரிக்கை அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்