››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் குடாநாட்டில்  இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் இராணுவம்

யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் இராணுவம்

[2016/07/21]

யாழ் குடாநாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்காக புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அமைவாக புதிதாக 100 வீடுகளை 45 நாட்களுக்குள் அமைத்துக் கொடுக்கும் சவால் மிகுந்த பணியினை யாழ் பாதுகாப்புப் படை தலைமையாகம் பொறுப்பேற்றுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது பிரதேசங்களுக்கு மீள குடியமர்த்துத்துவற்கென அரசினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினைப் பயன்படுத்தி வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இப்புதிய வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்த பின்னர் அவர்கள் அங்கு குடியமர்த்தப்படவுள்ளனர்.

இதற்கமைய கீரமலை பிரதேசத்தில் முதல் வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ் பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் திரு. பி. செந்தில்நாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு அமைக்கப்படவுள்ள வீடுகள் யாவும் தலா 20 பேர்ச் காணியில் 4.3 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அப்பணிகள் நிறைவுற்றதுடன் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள தமது சொந்த இடங்களில் குடியமர்த்தக் கூடியதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு மேற்படி திட்டத்தினை 45 நாட்களுக்குள் நிறைவு செய்து அவற்றின் ஆவணங்கள் ஆக்கம் மற்றும் விநியோகப் பணிகள் என்பனவற்றிற்காக மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கவுள்ளன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்