››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தென் ஆசிய சிந்தனைக்குழுக்களின் கூட்டமைப்புடன் இலங்கை சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து செயற்படும்

தென் ஆசிய சிந்தனைக்குழுக்களின் கூட்டமைப்புடன் இலங்கை சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு இணைந்து செயற்படும்

[2016/08/27]

இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், தென் ஆசிய சிந்தனைக்குழுக்களின் கூட்டமைப்புடன் இணைந்து அமைச்சின் வளாகத்தில் அண்மையில் (ஆகஸ்ட்,26) ஏற்பாடு செய்த "பிராந்திய பாதுகாப்பு கண்ணோட்டங்கள்" எனும் தலைப்பில் இடம்பெற்ற அங்குரார்ப்பண கலந்துரையாடல் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு செயலாளரும் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் தலைவருமான பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிராந்திய பாதுகாப்பு கண்ணோட்டங்கள் தொடர்பில் பேசும்போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையமானது, நூதனமான கண்ணோட்டத்தில் எழும் பிரச்சினை சட்டகத்திற்கு முக்கிய பங்கு வகித்தல், மாற்று கட்டமைப்புகளை செயல்படுத்தல், பிராந்தி பாதுகாப்பு விவாதத்தை வடிவமைக்க உதவுவதற்கான முதல் தேசிய நடவடிக்கைகளை அடையாளங்காணல் மற்றும் தேர்ந்தெடுத்தல் என்பனவற்றில் சேவையாற்றும் எனக்குறிப்பிட்டார். பிராந்தியம் மற்றும் பிராந்திய நாடுகளுக்கிடையில் நிலவும் டிஜிட்டல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் என்பன தொடர்பாக தீர்வுகளை காண்பது தொடர்பான இந்திய ஜனாதிபதி மோடியின் கோட்பாடுகளுடனும் நட்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார். நாடுகளுக்கிடையில் நிலவும் மேற்படி எல்லை தாண்டிய பிரச்சினைகளுக்கான தீர்வினை தனித்து நின்று எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

குறித்த இக் கலந்துரையாடலில் ஆசிய நாடுகளிச் சேர்ந்த 15 புத்தி ஜீவிகள் கலந்து கொண்டதுடன் தமது கருத்துக்களையும் முன்வைத்தனர். அவர்களுள் பங்களாதேஷிலிருந்து பங்கேற்ற மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஏஎன்எம் முனிருஸ்ஸமான் , பிஅய்பீஎஸ்எஸ், தென் ஆசிய பிராந்தியத்தின் கடல் பாதுகாப்பு கட்டமைப்பை விருத்தி செய்தலில் கடல்சார் கேந்திர நிலையமான இலங்கை முக்கியத்துவம் பெறுவதாக மேற்கோள் காட்டினார்.

அத்துடன் இங்கு நேபாளத்திலிருந்து பங்கேற்ற கலாநிதி. நிஸ்செல் பாண்டி, சீஎஸ்ஏஎஸ், இலங்கை தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் மற்றும் தென்னாசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியன ஒரு காத்திரமான அடைவினை கண்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தை நாம் பொதுவான சவால்களுக்காண கூட்டு தீர்வுத்திட்டங்களை ஆய்வு செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்

ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் அரசியல் கலந்துரையாடலுக்கான தலைவி கலாநிதி பீயட்ரிஸ் கொரவன்டாஸ்சீ, நான் இவ் ஒத்துழைப்பிற்கான கலந்துரையாடல் வெற்றிபெற வாழ்த்துவதுடன் தென் ஆசிய சிந்தனைக்குழுக்களின் கூட்டமைப்பு ஒத்துழைப்பிற்கான ஆய்வினை மேற்கொள்வது மிகமிக அவசியம் என தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வானது வெற்றிகரமாக அமைந்ததுடன் தென்னாசிய பிராந்தியத்தில் எழும் பாரம்பரிய மற்றும் பாரம்பரிய மற்ற பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக விரிவான கருத்துக்கள் புத்திஜீவிகளினால் முன் வைக்கப்பட்டன.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்