››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிழக்கு மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கர் அனுசாசனம் பெரும் வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக பங்கேற்பு

கிழக்கு மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கர் அனுசாசனம் பெரும் வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக பங்கேற்பு

[2016/08/29]

வரலாற்று சிறப்புமிக்க கிரிஹட சேய விகாரையில் நேற்று காலை (29,ஆகஸ்ட்) இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கராக அனுசாசனம் பெரும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேற்படி நிகழ்வானது, பிரதம விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய தெவினுவர சந்திம தேரருக்கு, அமரபுர மகா நிக்காயவின் அமரபுர பிரிவுக்கான கிழக்கு மாகாண பிரதம சங்கநாயக்க பட்டம் மற்றும் ஸ்ரீ ஆனந்த வங்ஷ சத்தர்ம எனும் கௌரவ பட்டம் என்பனவற்றை அளிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்திருந்தது.

இந்நிகழ்வின் போது வணக்கத்துக்குரிய தேரருக்கு மேற்படி பட்டங்களுக்கான “சன்னஸ் பத்திரம்” இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்ட அதேவேளை “விஜினி பத்திரம்” ஓய்வுபெற்ற முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் தயா சந்தகிரியினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நகழ்வில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், மூன்று தசாப்தங்களாக நீடித்த யுத்தத்தின்போது பௌத்த வணக்கஸ்தலங்களையும் புராதன வரலாற்று இடங்களையும் பாதுகாப்பதில் மகா சங்கத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோரினால் பல்வேறு தியாகங்கள் மற்றும் சேவைகள் ஆற்றப்பட்டன. இக்காலப்பகுதியில் அணைத்து மக்களின் நம்பிக்கை மற்றும் அவர்களின் வணக்கஸ்தலங்கள் கைவிடப்பட்டதுடன் புறக்கனிக்கபட்டு எவ்விதமான அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்ததுடன் ஆன்மீக வளர்சியுடன்கூடிய பௌதீக வளர்ச்சியின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

முக்கிய வணக்கஸ்தலங்களை பாதுகாப்பதில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சேவையினை நினைவு கூர்ந்த அவர், பிரதம விகாராதிபதியினால் அதன் அபிவிருத்திக்காக ஆற்றப்பட்ட பங்களிப்பினை ஆச்சர்யத்துடன் நினைவுகூர்ந்ததுடன் இவ் அளப்பரிய சேவையினை நல்கிய வணக்கத்துக்குரிய தேரரைப் பாராட்டி, அவருக்கு தனது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், எதிர்காலத்தில் இதனைப் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வணக்கஸ்தலங்களை பபாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வமைச்சு எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்

கிரிஹடு சேயவில் இம்மாதம் 24ம் திகதி ஆரம்பமான பல்வேறு மத அனுஷ்டானங்களைக் கொண்ட இந்நிகழ்வு, எதிர்வரும் 30ம் திகதி நிறைவுபெறும்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் கிரிஹடு சேய தொடர்பான கையேடு பிரதம விகாராதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டதோடு பிரதம அதிதிக்கு வரலாற்று சிறப்புமிக்க விகாரையின் நிழற்படமும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்