››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பராஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கு பெருமையை ஈட்டித்தந்த இராணுவ வீரர்

பராஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கு பெருமையை ஈட்டித்தந்த இராணுவ வீரர்

[2016/09/16]

ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ கோப்ரல் தினேஷ் பிரியந்த ஹேரத் பிரேஸிலிலின் ரியோ பராஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இறுதி சுற்றில் போட்டியிட்ட அவர் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஜபா படைப்பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ கோப்ரல் தினேஷ் 2008 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது காயமடைந்து மருத்துவ அடிப்படையில் ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

இவர் பராஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்ற இரண்டாவது இலங்கை வீரர் என்பதோடு 2012 இல் லண்டன் பராஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 400 மீ T46 பங்குபற்றி பிரதீப் சன்ஜய வெண்கலப் பதக்கத்தை பெற்ற முதலாவது பெருமைக்குரிய இலங்கை வீரர் என்பது குறிப்பிடத்தக்கதகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்