››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நீர்க்காக தாக்குதல் பயிற்சி 2016 இறுதிகட்ட நடவடிக்கைகளுக்கு தயார்

நீர்க்காக தாக்குதல் பயிற்சி 2016 இறுதிகட்ட நடவடிக்கைகளுக்கு தயார்

[2016/09/16]

இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட களமுறைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல் பயிற்சி –2016 இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இக்களமுறைப் பயிற்சியானது செப்டம்பர்.4 திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கதாகும். தற்பொழுது இப்பயிற்சியானது கிழக்கு பிராந்தியத்திலுள்ள வெருகல், சீகிரியா, லஹுகல, மற்றும் வட்டுவான் பகுதியூடாக இடம்பெற்று வருகின்றது

இலங்கை இராணுவ ஊடகத்தகாவலின் பிரகாரம் இப்பயிற்சியினை தியதலவயின் இராணுவ பயிற்சி கட்டளை மையத்திலுள்ள உடற்பயிற்சி தலைமையகத்தின் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் இறுதிகட்ட பயிற்சி நடவடிக்கைகள் செவ்வாய் கிழமை (செப்டம்பர் – 20 ) திரியாய பிரதேசத்தில் மேட்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வருடம் வெளிநாட்டு படைவீரர்கள் 58 பேர் உட்பட மொத்தமாக 3458 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அதேவேளை உடற்பயிற்சி இறுதியில் நடைபெற இருக்கும் “ஒன்ஸ்லோட்” எனப்படும் தாக்குதலினை பார்வையிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சீடிஎஸ், முப்படைத்தளபதிகள், மற்றும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் சமுகமளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்