››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஐநா பொதுச்சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி, உலகத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்

ஐநா பொதுச்சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி, உலகத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்

[2016/09/19]

யூயோர்க்கில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் காரணமாக 29 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து அந்நகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (18) மாலை நியூயோர்க்கின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தை வந்தடைந்தார்.

Loews Regency ஹோட்டலுக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, ஐநாவுக்கான இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிநிதி கலாநிதி ரோகண பெரேரா, வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

ஜனாதிபதி வருகை தருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி ரொஹான் பெரேரா அவர்கள், 71ஆவது பொதுச்சபைக் கூடத்தொடரில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தருவதானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதொன்று எனக்குறிப்பிட்ட அதேவேளை, 71 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரானது, கடந்த வருட கூட்டத்தொடரில் தீர்மானித்த புத்தாயிரம் ஆண்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அடைந்து கொண்ட முன்னேற்றங்கள் குறித்த மீளாய்வினை மேற்கொள்வதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை ஜனாதிபதி அவர்கள் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரிசில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டின் உலக வெப்பமயமாதல் தொடர்பான பாரிஸ் பிரகடனத்திற்கான இலங்கையின் ஒப்புதல் அறிவிப்பினையும் கையளிக்கவுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஐநா பொதுச்சபையில் உரையாற்றவுள்ளதுடன் ஐநா தலமையகத்தில் நாளை 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள திறந்த அரசாங்கத்தின் பங்களிப்புடன் பல முன்னணி நாடுகளுடனான முக்கிய நிகழ்விலும் உரையாற்றவுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி அவர்கள் அவுஸ்திரேலியாவின் பிரதமர் Malcolm Turnbull ஐநாவின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் M J Akbar நேபாள பிரதமர் புஷ்பா கமல் டஹால், உலக பொருளாதார அமையத்தின் தலைவர் பேராசிரியர் Klaus Schwab மற்றும் Millennium Challenge Corporation தலைவர் Dana J Hyde உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அவர்களினால் உலகத் தலைவர்களுக்காக ஒழுங்கு செய்யப்படும் விசேட நிகழ்வு மற்றும் ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மதிய போசன நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் உலகத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

ஐநா அலுவலம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பானது நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா மற்றும் பல தலைவர்கள் இன்று நியூயோர்க் நகருக்கு வருகை தரவுள்ளனர்.
நியூயோர்க் நகரின் பாதுகாப்பானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர ஆளுனர் நேற்று மாலை தெரிவித்துள்ளார்.

நன்றி: ஜனாதிபதி செய்தி ஊடகம்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்