››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கி வைப்பு

கடற்படையினரால் பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்கி வைப்பு

[2016/09/21]

மஹா காசியப்ப வித்தியாலயத்தில் தரம் 1 முதல் தரம் 5 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு கடற்படையினரால் ஒரு தொகை காலணி மற்றும் காலுறை என்பன அண்மையில் (செப்டம்பர்.19) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் அனேகமான மாணவர்கள் பாடசாலைக்கு முறையான காலணியின்றி வருகை தந்து தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களினால், மேற்படி மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நன்கொடை இரண்டு கட்டங்களில் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் முதற்கட்டம் இந்த வருடத்தின் ஜுன் மாதம் செயற்படுத்தப்பட்டது. இச் செயற்றிட்டத்தினை மேற்கொண்ட கடற்படையினர் குறித்த பாடசலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் பெரிதும் பாராட்டப்பட்டனர். மேலும், இச் செயற்றிட்டம் கடற்படையினரின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்