››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு செயலாளர் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம்

பாதுகாப்பு செயலாளர் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம்

[2016/10/17]

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் சீனாவுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது அவர் சீன அரசவை உறுப்பினரும் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சருமான ஜெனெரல் சாங் வாங்குஆன் (Chang Wanquan) அவர்களை சந்தித்தார். இதன்போது அவர், பாதுகாப்பு துறையில் இரு தரப்பு ஒத்துழைப்புக்களை வலுவூட்டும் வகையில் சீன பாதுகாப்பு அமைச்சரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் அழைப்பு விடுத்தார்.

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான இரண்டாவது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கலந்துரையாடலும் இவ்விஜயத்தின்போது இடம்பெற்றது. இதில் உயர் மட்ட இராணுவ பரிமாற்றங்கள், இராணுவ உதவி, பயிற்சி வாய்ப்புக்கள், பாதுகாப்பு சிந்தனைக் குழுக்கள் இடையேயான ஒத்துழைப்பு, புலனாய்வு ஒத்துழைப்பு,கூட்டு இராணுவ பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்குகளில் பங்குபற்றல் மற்றும் பயிற்சி பட்டறைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. இத்தூதுக்குழுவினர், இருதரப்பு நட்புறவில் பாதுகாப்பனது முக்கிய தூனாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியதோடு இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் வழுப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இப்பேச்சுவார்த்தை நிறைவில் 120 மில்லியன் RMB பெறுமதியான இராணுவ உதவி மற்றும் ஒரு கடல் ரோந்துப் படகு என்பவற்றை வழங்குவது தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன. குறித்த இந்நிகழ்வின் சீன தூதுக்குழுவினருக்கு, கூட்டு அதிகாரிகள் துறை, மத்திய இராணுவ ஆணையகம் மற்றும் சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான சீன நிறுவனம் (CIISS) என்பவற்றின் துணை தலைவர் எட்மிரல் சன் ஜியான்குவோ அவர்கள் தலைமை தாங்கினார்.

இதேவேளை, இலங்கை தூதுக்குழுவில் விமானப்படை தளபதி, எயார் மாஷல் கபில ஜயம்பதி, கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் எட்மிரல் எஸ் எஸ் ரணசிங்க, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எச் சீ பி குணதிலக, பாதுகாப்பு அமைச்சின் வெளிநாட்டு நடப்புகளுக்கான சிரேஷ்ட உதவிச் செயலாளர் சசிகலா பிரேமவர்த்தன மற்றும் சீனாவுக்கான இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் திலக் வீரக்கோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்