››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினரால் மொனராகலை பிரதேசத்தில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பு

கடற்படையினரால் மொனராகலை பிரதேசத்தில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிப்பு

[2016/10/27]

குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் சமூக நலன்புரி நடவடிக்கைளின் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் மற்றுமொரு குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மொனராகலை அலுத்வெவ கனிஷ்ட வித்தியாலயயத்தில் நிறுவியுள்ளனர். இங்கு நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 5,000 லீட்டர் நீரினை சுத்திகரிக்க முடியும் எனவும் இதன்மூலம் சுமார் 275ற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கிராமவாசிகள் நன்மையடையவுள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரகம் சார்ந்த நோய்கள் பரவளாக காணப்படும் பிரதேசங்களில், கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பணிப்புரைக்கமைவாக இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பல நிறுவப்பட்டு வருகின்றன. இதற்கான நிதி அனுசரணையை
சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி வழங்கி வருகின்ற அதேவேளை, சில தனியார் நிறுவனங்களும் இத்திட்டத்திற்கு உதவியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்திட்டங்களை பாடசாலைகள் மட்டத்தில் மட்டும் மட்டுபடுத்தாமல் அனுராதபுரம் பௌத்த துறவிகள் பல்கலைக்கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் செயற்படுத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி இது போன்ற சுமார் 40 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 22,000ற்கு மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன. சிறுநீரகம் சார்ந்த நோய்கள் பரவளாக காணப்படும் வட மேல் மற்றும் வட மத்திய பிராந்திய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீரினை வழங்கும் வகையில் நடமாடும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை செயற்படுத்தி வருகின்றன.மேலும் இலங்கை கடற்படையின் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான பிரிவு புதுக்ககூடிய சக்தி வளங்களை பயன்படுத்தி இத்திட்டனை எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்