››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'செனஹச சியபத' வீட்டுத்திட்டத்துக்கான உடன்படிக்கையில் கைச்சாத்து

'செனஹச சியபத' வீட்டுத்திட்டத்துக்கான உடன்படிக்கையில் கைச்சாத்து

[2016/11/17]

அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்கான வீடுகளை அமைக்கும் திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் அனுசரணையாளர்களுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (நவம்பர்.16) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதனையொட்டியதாக செனஹச சியபத' வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இத் திட்டத்திற்காக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வில் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) திரு. சரத்சந்திர விதான, டயலோக் அக்சியடா வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. ஹான்ஸ் விஜேசூரிய, அசோசியேட் செய்திபத்திரிகைகளின் தவிசாளர் திரு. கவன ரத்னாயக்க உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

'செனஹச சியபத' வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 30 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அவ்வீடுகள் அரநாயக்க மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன. இத்திட்டம் பாதுகாப்பு அமைச்சு, இடர் முகாமைத்துவ அமைச்சு, டயலோக் அக்சியடா, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் அசோசியேட் செய்திபத்திரிகை ஆகிய நிறுவனங்களின் கூட்டிணைப்பில் முப்படைகளின் தொழிநுட்ப மற்றும் ஆளணி உதவியுடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்