››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரினால் கல்விக் கருத்தரங்குகள்

கிளிநொச்சி மாணவர்களுக்கு இராணுவத்தினரினால் கல்விக் கருத்தரங்குகள்

[2016/12/01]

க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இரு வேறு தினங்களில் நடாத்தப்பட்ட இக்கல்வி கருத்தரங்குகள் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பூனகரி மஹா வித்தியாலயத்திலும், 24ஆம் திகதி ஜயபுரம் மஹா வித்தியாலயத்திலும் நடைபெற்றது.

180 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்ட இக்கல்விக் கருத்தரங்கு இராணுவத்தினரினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமுக நலன்புரி சேவைகளின் ஒருபகுதியாக இடம்பெற்றது. மேலும், இங்கு பொதுப் பரீட்சைகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலன் கருதி விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் தொடர்பான விரிவான விளக்கங்கள் தேர்ச்சிபெற்ற ஆசிரியர் குழாத்தினரால் வழங்கப்பட்டன.
 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்