››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொழும்பு எயார் கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

கொழும்பு எயார் கருத்தரங்கில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2016/12/02]

இலங்கை விமானப் படையினரால் அத்திட்டிய ஈகிள்ஸ் கேட்போர் கூடத்தில் இன்று (டிசம்பர். 01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘கொழும்பு எயார் கருத்தரங்கு – 2016’ எனும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வரவேற்றார்.
"பிராந்திய பாதுகாப்பில் வான் பலத்தின் பங்கு” எனும் தொனிப்பொருளில் கொழும்பு எயார் கருத்தரங்கு – 2016 இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முகம்கொடுக்கும் வகையில் உயர்வாதும், துரிதமானதும் மற்றும் விரைவில் பெற்றுக்கொள்ளக்கூடியாதுமான வான் சொத்துக்களே முதன்மை தேர்வாக அமைகின்றன. நாம் நோக்கியது போல, நேரடி இராணுவ அச்சுறுத்தலாக, இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்படும் அனர்த்தமாக இருந்தாலும் அதனை முதலில் அடைவதும் அதற்கு நிவாரணமளிப்பதும் விமான சொத்துக்களே என சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டு எமது தனி நபர் வருமானத்தை இரண்டுமடங்காக முன்னெடுத்துச் செல்லுதல், பொருளாதார வளர்ச்சியை தூண்டும் பிரதான காரணியாக உள்ளது என்பதாகவும், அறிவு சார் பொருளாதாரம் ஆகியவற்றிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை நாம் அறிவோம் என தெரிவித்த அதேவேளை உயர் தரமான திறன்களுக்கு முக்கியத்துவமளிக்கும் ஒரு யுகமாக அமையவுள்ளது. இராணுவ மற்றும் சிவில் ஆகிய இரு வான் பலமானது எமது அபிவிருத்திக்கு பாரிய உந்துசக்தியாக அமையவுள்ளது என்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில், இன்று உலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. எனவே கட்டாயம் நாம், நம்மை நவீன வளர்ச்சிக்கு கேற்ப விஷேடமாக தொழிநுட்ப துறையில் தயார் படுத்த்திகொள்ள வேண்டும். அத்தோடு பிராந்திய ரீதியில் ஒன்றிணைந்து செயற்படும்போது எம்மால் முன்னேறிச்செல்ல முடியும் என்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் நிறைவின்போது செயலாளர் அவர்கள் கருத்தரங்கு வெற்றிகரமாக முடிவடைந்ததை இட்டு தளபதிகள், விமானப் படை வீர வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து அறிவையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் தமது நன்றியையும் தெரிவித்தார்.

இந் நிகழ்வின்போது, பாதுகாப்பு செயாலாளர் அவர்களுக்கு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களால் நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், வெளிநாட்டு அதிதிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்