››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு எனும் பயிற்சிப்பட்டறையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு எனும் பயிற்சிப்பட்டறையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2016/12/06]

இலங்கை மைக்ரோசாப்ட் மற்றும் லங்கா லொஜிஸ்டிக் கம்பனியினால் இன்று (டிசம்பர்.06) கொழும்பு கோல்பேஸ் ஹோடேலில் ஒழுங்கு செய்யப்பட்ட டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு எனும் பயிற்சிப்பட்டறை நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், தொழிநுட்பத்துறையில் ஏற்பட்டு வரும் துரித மாற்றங்களின் காரணமாக ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக விரிவான விளக்கத்தை பெற்றிருத்தல் அவசியம் எனவும் தகவல் தொழிநுட்பப் போர் யுகத்தில் நாம் எமது சேவைகள் செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைகள் என்பனவற்றை புதுமையான தொழில்நுட்பதுறைக்குட்படுத்தல் அவசியமாகும் எனவும் குறிப்பிட்டார். இன்றைய சூழலில் தகவகல்ளை பெற்றுக்கொள்ளல் உயிர் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் பல்வேறு அச்சுறுத்தல்களை கண்டறியத் தக்கவகையில் புலனாய்வு தகவல்களாக மாற்றம் பெறுவதற்கும் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும் முக்கிய அளவீடுகளாகஅமைகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்தம் நிறைவுற்றதன் பின்னர் இணைய எல்லைகளை பாதுகாப்பதே அது எதிர் நோக்கும் உயரிய பிரச்சினையாகும். இவ்வகையான பயங்கர விளைவினை எதிர்நோக்கக் கூடிய எந்தவித பாதிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை குறைக்க அல்லது பாதுகாக்க கூடிய அறிவினை நாம் கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்