››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

பொதுமன்னிப்பு காலம் சாதகமான நிலையில்

[2016/12/11]

இம்மாதம் 1ம் திகதி முதல் அறிவிக்கப்பட்ட ஒரு மாதகால கால எல்லையைக் கொண்ட பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற படைவீரர்கள் பலர் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து நீங்கியுள்ளனர். உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்கள் அவர்கள் பணியாற்றி இராணுவ படைப்பிரிவுக்கும், விமானப்படை வீரர்கள் விமானப் படை தலைமையகத்துக்கும், கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமிற்கும் உத்தியோக பூர்வ ஆவணங்களுடன் வருகை தருமாறு கோரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தை பயன்படுத்தி இலங்கை இராணுவத்திலிருந்து 02 அதிகாரிகள் மற்றும் 1492 இராணுவ வீரர்களும், விமானப்படையிலிருந்து 02 அதிகாரிகள் மற்றும் 67 விமானப்படை வீரர்களும், கடற்படையிலிருந்து 162கடற்படை வீரர்களும் தத்தமது சேவை நிலையங்களில் அறிக்கையிட்டுள்ளதாகவும் அவர்களில் 01 அதிகாரி மற்றும் 1185 படைவீர்கள் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்

ஒரு மாதகால கால எல்லையைக் கொண்ட பொதுமன்னிப்பு காலமானது இவ்வருடத்தில் அறிவிக்கப்பட்ட இரண்டாவது பொதுமன்னிப்புக்காலமாகும் . முதலாவது பொதுமன்னிப்பு கால எல்லை ஜுன் மாதம் 13ம் திகதியிலிருந்து ஜுலை மாதம் 12ம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த அதேவேளை இதுவரை சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுகொள்ளாத படைவீரர்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதேவேளை, இப் பொதுமன்னிப்புக் காலம் இம்மாதம் 31ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்