››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

துரித அம்பியுலன்ஸ் சேவைகளுக்காக இராணுவத்தினர் உதவி

துரித அம்பியுலன்ஸ் சேவைகளுக்காக இராணுவத்தினர் உதவி

[2016/12/23]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் அதனோடு இணைந்த வெளி வைத்தியசாலைகளின் அம்பியுலன்ஸ் சாரதிகள் மற்றும் ஏனைய சாரதிகள் மேற்கொண்டுள்ள பணி பகிஸ்கரிப்பினால் ஏற்பட்டுள்ள சிரமங்களை இலகு படுத்தும் வகையில் வன்னி பாதுகாப்பு படை தலைமையக இராணுவத்தினர் அக்கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சாரதிகளின் இப் பணி பகிஸ்கரிப்பினால் அனுராதபுர மாவட்டத்தின் 16 வைத்தியசாலைகளின் நாளாந்த பணிகள் பல பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நோயாளர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் சுகாதார சேவை நிறுவனங்கள் வைத்திய சாலையின் முக்கிய சேவைகளை முன்னெடுத்துச்செல்ல இராணுவத்தினரின் உதவியைக் கோரியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அம்பியுலன்ஸ் மற்றும் வைத்திசாலையின் இதர போக்குவரத்து சேவைகளுக்கு இராணுவத்தினரை குறித்த இராணுவ தலைமையகம் ஈடுபடுத்தியுள்ளது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்கள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்