››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சமூக நலன்புரி செயற்றிட்டங்களில் இலங்கை கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

சமூக நலன்புரி செயற்றிட்டங்களில் இலங்கை கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

[2016/12/23]

மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற் படை பல்வேறு சமூக நலன்புரி நடவடிக்கை செயற்றிட்டங்களை செயற்படுத்தியுள்ளது. அபிவருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியன அவற்றில் மக்களுக்கு பெரிதும் பயனளித்த செயற்றிட்டங்கள் ஆகும்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் எண்ணக்கருவின் கீழ் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி பூணவ மற்றும் கடவதரம்வெவ ஆகிய பிரதேசங்களில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டன.

எதிர் பார்த்த இலக்கைவிட சுமார் 71 க்கும் அதிகமான குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை சிறு நீரக நோய் பரவளாக காணப்பட்ட பிரதேசங்களில் ஒரு வருட காலதிதினுள் நிறுவியதன் மூலம் சுமார் 33,000 குடுமபங்களும் மற்றும் 25,000 பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்று வருகின்றனர்.

இதற்கான நிதி அனுசரணையை சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குகின்றன.
மகளுக்கு பாதுகாப்பான நீரினைப் பெற்றஞக் கொடுக்கும வகையில் நிர்மாணிக்கட்டுள்ள நீர் சுத்தகரிப்பு நிலையங்களை பரமறிப்பத்கான குழுவினை கடற்படை ஈடுபடுத்தியுள்ளது. அத்துடன் கடற்படையினரால் விவசாய சமூகங்கள் மத்தியில் ஏற்படுகின்ற சிறுநீரக நோய்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்ச்சி திட்டங்களையும் நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்