››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“ஸ்வர்ண ஜெயந்தி” படைவீரர் கிராம குடும்பங்களுக்கு நிதியுதவி

“ஸ்வர்ண ஜெயந்தி” படைவீரர் கிராம குடும்பங்களுக்கு நிதியுதவி

[2016/12/24]

“ஸ்வர்ண ஜெயந்தி” படைவீரர் கிராம குடும்பங்களுக்கு தலா 25000 ரூபா பெறுமதியான பண வவுச்சர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நேற்று (டிசம்பர். 23) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. ஏபிஜி. கித்சிறி மற்றும் ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவி திருமதி. அனோமா பொன்சேக்கா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த இந்நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் அனுசரணையுடன் ரணவிரு சேவா அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

“ஸ்வர்ண ஜெயந்தி” படைவீரர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 90 குடும்பங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரிடமிருந்து பண வவுச்சர்களை மேற்படி நிகழ்வின்போது பெற்றுக் கொண்டனர்.

இதன்போது உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர், வைத்தியசாலை, முன்பள்ளிகள் அடங்கலாக சுமார் 50-60 மில்லியன் ரூபா தொகையினை இக்கிராமத்தின் மீள்கட்டுமான பணிகளுக்காக இலங்கை இராணுவம் செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இங்கு வாழும் குடும்பங்களுக்கு தேவையான பல உதவிகள் பலவற்றை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் “ஸ்வர்ண ஜெயந்தி” படைவீரர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்