››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது – ஜனாதிபதி

[2016/12/25]

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உலகளாவிய விழாவாக கொண்டாடும் நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபாச சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.

மானிட பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்ற சிறப்புமிக்க வெற்றிகளில், மதம் சார்ந்த விடயம் முன்னிலையிலுள்ளது. மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளே அவர்கள் பிறரிடத்தில் தயவு காட்டுவதற்கும் அவர்களது உரிமைகள் தொடர்பில் ஆழமாக சிந்திப்பதற்கும் காரணமாக அமைகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெறும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைத் தெரித்துள்ளார்.

அனைவர் மீதும் அன்பை செலுத்தும் நத்தார் பண்டிகையின் உண்மையான செய்தியான சமாதானம், மகிழ்ச்சி, கருணை நிறைந்த சிறப்பான நத்தார் இம்முறை அமைய வேண்டுமென அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி

மானிட பரிணாம வளர்ச்சியில் மனிதன் பெற்ற சிறப்புமிக்க வெற்றிகளில், மதம் சார்ந்த விடயம் முன்னிலையிலுள்ளது. மனிதர்களின் மதம் சார்ந்த நம்பிக்கைகளே அவர்கள் பிறரிடத்தில் தயவு காட்டுவதற்கும் அவர்களது உரிமைகள் தொடர்பில் ஆழமாக சிந்திப்பதற்கும் காரணமாக அமைகிறது.

இரண்டாயிரத்திப்பதினாறு ஆண்டுகளுக்கு முன்னர்; அறியாமை காரணமாக சமூக சீர்கேடுகள் நிறைந்திருந்த காலத்திலேயே குழந்தை யேசுவின் பிறப்பு நிகழ்ந்தது. அந்நாளில் ஏழையின் மாட்டுத் தொழுவத்தை மையமாகக் கொண்டு பிரவாகித்த புதிய மத நோக்கின்பால் ஒளிர்ந்த நட்சத்திரங்கள் அன்றுபோல் இன்றும் மானிட உன்னதத்தின் வழித்தடமாக மிளிர்கின்றன.

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உலகளாவிய விழாவாக கொண்டாடும் நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது. அன்று ஆணவம் பிடித்திருந்த ஏரோது மன்னன் போன்ற மன்னர்களை வரலாற்றுக்கே மட்டுப்படுத்தி, சகவாழ்வின் செய்தியை உலகுக்கு கொண்டுவந்த யேசு கிறிஸ்து பிரானை சதாகால புனிதத்தன்மைக்கு உயர்த்தியது நல்ல விடயங்களை வணக்கத்துக்குரியவையாக கருதும் உலக மக்களேயாவர்.

அனைவர் மீதும் அன்பை செலுத்தும் நத்தார் பண்டிகையின் உண்மையான செய்தியான சமாதானம், மகிழ்ச்சி, கருணை நிறைந்த சிறப்பான நத்தார் இம்முறை அமைய வேண்டுமென அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள்!

நன்றி : ஜனாதிபதி செய்தி ஊடகம்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்